ADDED : ஜூன் 06, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
கோபி:உலக
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கோபி நகராட்சி சிறப்பு கூட்டம்
சேர்மன் நாகராஜ், கமிஷனர் மங்கையர்கரசன் தலைமையில் நடந்தது.
கோபி நகராட்சியில், 7,000 மரக்கன்று நட்டு, பராமரிப்பது உள்பட
மூன்று தீர்மானம் நிறைவேற்றி, உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி
எடுத்துகொண்டனர். 30 கவுன்சிலர்களில், சேர்மன் உட்பட 14 பேர்
மட்டும் கூட்டத்தில் பங்கேற்றனர். 16 கவுன்சிலர்கள்
பங்கேற்கவில்லை. சிறப்பு கூட்டம் என்பதால், கவுன்சிலர்களுக்கு
போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால்தான் அனைவராலும் பங்கேற்க
முடியவில்லை என்று, சேர்மன் தெரிவித்தார்.
