/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாக்கடை கட்ட படிக்கட்டு இடிப்பு ௩ மாதமாக நகராட்சி மெத்தனம்
/
சாக்கடை கட்ட படிக்கட்டு இடிப்பு ௩ மாதமாக நகராட்சி மெத்தனம்
சாக்கடை கட்ட படிக்கட்டு இடிப்பு ௩ மாதமாக நகராட்சி மெத்தனம்
சாக்கடை கட்ட படிக்கட்டு இடிப்பு ௩ மாதமாக நகராட்சி மெத்தனம்
ADDED : டிச 08, 2024 01:42 AM
சாக்கடை கட்ட படிக்கட்டு இடிப்பு
௩ மாதமாக நகராட்சி மெத்தனம்
தாராபுரம், டிச. 8-
தாராபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு ஆடு, மீன் மற்றும் கோழி இறைச்சி கடைகளும் உள்ளன. இப்பகுதியில் உள்ள, 15 கடைகளின் படிக்கட்டுகளை, மூன்று மாதத்துக்கு முன், நகராட்சி ஊழியர்கள் இடித்தனர். கடைக்காரர்கள் கேட்டபோது, சாக்கடை கட்ட வுள்ளதாக தெரிவித்தனர். ஆனால், மூன்று மாதமாகியும் பணியை தொடங்கவில்லை. படிக்கட்டை இடித்து விட்டதால், வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு செல்வதில் தடுமாற்றம் ஏற்படுகிறது. சாக்கடையை விரைந்து கட்ட வேண்டும். அல்லது படிக்கட்டை மீண்டும் கட்டித்தர வேண்டும் என்பது, கடைக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.