/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவிலுக்கு சென்ற 'ஆண்டவர்' கொலை: மகள் புகாரில் தொழிலாளி மீது வழக்கு

ADDED : ஜூலை 08, 2025 01:12 AM
பவானி, அம்மாபேட்டை அருகே முகாசிப்புதுாரை சேர்ந்தவர் ஆண்டவர், 55; பெயிண்டிங் வேலை செய்து வந்தார். திருமணமாகி மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
பெயிண்ட் அடிப்பதற்காக பக்கத்து வீட்டை சேர்ந்த சதீஸ், ௨௭, மூர்த்தி ஆகியோரை, நேற்று முன்தினம் அழைத்து சென்றார். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் வீட்டுக்கு வந்திருந்த மகள் பூஜாவுடன், ௨௩, அருகிலுள்ள கோவிலுக்கு சென்றார்.
அங்கே வந்த சதீஸ், கூலி பணம் கேட்டு ஆண்டவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அவரை மார்பில் கை வைத்து தள்ளிவிட்டு சென்று விட்டார். இதனால் தடுமாறி விழுந்த தந்தையை, அப்பகுதியினர் உதவியுடன் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு, பூஜா அழைத்து சென்றார். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. பூஜா புகாரின்படி அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, சதீசை தேடி வருகின்றனர்.