/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரிந்து வாழ்ந்த மனைவி கொலை; தப்பிய கணவன் போலீசில் சரண்
/
பிரிந்து வாழ்ந்த மனைவி கொலை; தப்பிய கணவன் போலீசில் சரண்
பிரிந்து வாழ்ந்த மனைவி கொலை; தப்பிய கணவன் போலீசில் சரண்
பிரிந்து வாழ்ந்த மனைவி கொலை; தப்பிய கணவன் போலீசில் சரண்
ADDED : ஜூலை 23, 2024 01:53 AM
காங்கேயம் : வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையத்தில், நுால் மில் செயல்-பட்டு வருகிறது. இங்கு, 500க்கும் மேற்பட்டோர் மில் குடியிருப்பில் தங்கியும், தினக்கூலியாகவும் வேலை செய்து வரு-கின்றனர். திருச்சி, சமயபுரத்தை சேர்ந்தவர் நர்மதா, 31; இவரின் மகன் குருபிரசாத், 8; மகள்
ரித்திகா, 6; ஆகியோருடன் மில் குடியிருப்பில் வசித்தார். இவரின் கணவர் திருச்சி, இடையத்துமங்களத்தை சேர்ந்த சிவக்-குமார், 39; மூன்று ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து, மில்லில் வேலை செய்து வந்தார்.
மாதம் ஒரு முறை, மனைவி மற்றும் குழந்தைகளை காணவரும் சிவக்குமார், மனைவியிடம் தனக்கு கடன் அதிகமாக உள்ளதா-கவும், யாரிடமாவது கடன் பெற்று தருமாறும் தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மகன் பிறந்த நாளை கொண்-டாட, ஓலப்பாளையத்தில் உள்ள மில் குடியிருப்புக்கு சிவகுமார் வந்தார். மகன் பிறந்தநாளை கொண்டாடிய பின், இரவில் வீடு திரும்பினர்.
நேற்று காலை பெண் குழந்தை பசியால் அழுக, குழந்தையை சமாதானம் செய்வது தொடர்பாக, கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவக்-குமார், கத்தியால் கழுத்தில்
சரமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நர்மதா இறந்தார்.
இந்நிலையில் குழந்தை அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்-தினர் வந்தபோது, சிவக்குமார் அவரது பைக்கை எடுத்துக்-கொண்டு தப்பி விட்டார். நர்மதா சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், மில் நிர்வாகம் மூலம், வெள்ளகோவில் போலீசாருக்கு புகார் தந்தனர்.
இதனிடையே திருப்பூரில் உள்ள சகோதரி வீட்டில் அடைக்கல-மாக சிவக்குமார் சென்றுள்ளார். மில் குடியிருப்புவாசிகள் சிவக்கு-மாரை மொபைல்போனில் தொடர்பு கொண்டு, போலீசார் நெருங்கி விட்டதாகவும், எந்நேரத்திலும் என்கவுன்டர் செய்து விடுவார்கள் என்றும் பயமுறுத்தியுள்ளனர். இதனால் பயந்து போன சிவக்குமார், காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில் சரண-டைந்தார்.