ADDED : மே 17, 2026 05:09 AM
? 17ஈரோடு :ஈரோட்டை அடுத்த சின்னியம்பாளையம் பிரிவு பாரதி நகரில் வசிப்பவர் காமராஜ். மனைவி இறந்த நிலையில் மகன்கள் தரணிதரன், யோகேஸ்வரனுடன் வசிக்கிறார். இதில் தரணிதரன் பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்று கிறார். இவரை பார்க்க இரண்டாவது மகனுடன் பெங்களூர் சென்றார். இந்நிலையில் வீட்டில் ஆள் நடமாட்டம் இருப்பது போன்ற சத்தம் கேட்டதால், அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து சென்று பார்த்தனர். வீட்டில் திருட முயன்ற ஆசாமியை பிடித்து மொடக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர்.'''
விசாரணையில், ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் இரண்டாவது வீதி யோகநாதன், 38, என தெரியவந்தது. காமராஜ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த வெள்ளி கிண்ணம், வெள்ளி டம்ளரை திருடி தப்ப முயன்றது உறுதியானது. யோகநாதனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது, 2021ல் கொலை வழக்கு இருப்பதும் தெரியவந்தது.
