/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முத்தம்பாளையம் பகுதி-7 மக்கள் அரசு பஸ் வசதி கோரி முறையீடு
/
முத்தம்பாளையம் பகுதி-7 மக்கள் அரசு பஸ் வசதி கோரி முறையீடு
முத்தம்பாளையம் பகுதி-7 மக்கள் அரசு பஸ் வசதி கோரி முறையீடு
முத்தம்பாளையம் பகுதி-7 மக்கள் அரசு பஸ் வசதி கோரி முறையீடு
ADDED : ஏப் 30, 2025 01:37 AM
ஈரோடு::
ஈரோடு, ரங்கம்பாளையம் அடுத்த முத்தம்பாளையம் பகுதி-7 பகுதியை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: மாநகராட்சி, 49வது வார்டில், முத்தம்பாளையம் பகுதி-7 உள்ளது.
இங்கு பாரதி நகர் பெயரில் அடுக்குமாடி குடியிருப்பில், 256 வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். அதே பகுதியில், 25க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து மக்கள் வேலைகளுக்கும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் படிக்கவும் சென்று வருகின்றனர். இங்குள்ளவர்கள் ஈரோடு கே.கே.நகர், ஜோசப் மருத்துவமனை பஸ் ஸ்டாப் சென்று, பஸ் ஏறி, இறங்க வேண்டி உள்ளது. ஜோசப் மருத்துவமனை பஸ் ஸ்டாப்புக்கு, ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சில மாதத்துக்கு முன் இரவில் தண்டவாளத்தை ஒருவர் கடந்த போது, ரயில் மோதி இறந்துள்ளார். கே.கே.நகர் செல்ல, 1.5 கி.மீ., துாரம் நடக்க வேண்டும். இதில், 700 மீட்டர் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி, கரடுமுரடான பாதை உள்ளது. மக்களின் நலன் கருதி, இப்பகுதிக்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.