ADDED : அக் 10, 2026 06:18 AM
ஈரோடு:ஈரோட்டில்,
'மை பாரத்' திட்ட அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர்
கந்தசாமி தலைமையில் நடந்தது.
'மை பாரத்' திட்டத்தின் நோக்கம்,
இளைஞர்களுக்கான தன்னார்வ சேவை வாய்ப்புகள், டிஜிட்டல் தளத்தின்
செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 15 முதல், 29 வயதுக்கு
உட்பட்ட இளைஞர்களை 'மை பாரத்' இணைய தளத்தில் பதிவு செய்தல், கல்வி
நிறுவனங்கள், என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., - பாரத் சாரணர் மற்றும்
வழிகாட்டி இயக்கம், இளைஞர் மன்றங்கள், அரசு துறைகளுடன்
ஒருங்கிணைந்த செயல்படுதல், இளைஞர்களின் திறன் மேம்பாடு, சமூக
பங்கேற்பை அதிகரித்தல் குறித்து ஆலோசித்தனர். இத்திட்ட
செயல்பாடுகளை மாவட்டம் முழுவதும் செயல்படுத்த, இளைஞர்களின்
பங்கேற்பை அதிகரிக்கவும் வலியுறுத்தினர். 'மை பாரத்' திட்ட துணை
இயக்குனர் ரெம்யா, பயிற்சி துணை கலெக்டர் சித்தார்த் உட்பட பலர்
பங்கேற்றனர்.
