தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நவீன சலவையகம் அமைக்க மானியம்

நவீன சலவையகம் அமைக்க மானியம்

நவீன சலவையகம் அமைக்க மானியம்


ADDED : அக் 10, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பொருளாதார மேம்பாட்டுக்காக, 5 பேர் கொண்ட குழுவினர் நவீன சலவையகம் அமைக்க தலா, 5 லட்சம் ரூபாய் வீதம் மாநில அளவில், 15 அலகுகள் ஏற்படுத்தலாம்.

சலவை தொழிலில் உள்ள ஆண், பெண் என, 5 பேர் கொண்ட ஒரு குழு அமைத்து, அக்குழுவுக்கு நவீன முறை சலவையகம் அமைக்க உபகரணம் வாங்க நிதி வழங்கப்படும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருவாய், ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதி

யானவர்கள், கலெக்டர் அலுவலகம், கூடுதல் கட்டடம், 4ம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

'

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us