/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மர்ம விலங்கு கடித்து ௪௦ நாட்டுச்சேவல், கோழி பலி பாலமலை அடிவாரத்தில் பகீர்
/
மர்ம விலங்கு கடித்து ௪௦ நாட்டுச்சேவல், கோழி பலி பாலமலை அடிவாரத்தில் பகீர்
மர்ம விலங்கு கடித்து ௪௦ நாட்டுச்சேவல், கோழி பலி பாலமலை அடிவாரத்தில் பகீர்
மர்ம விலங்கு கடித்து ௪௦ நாட்டுச்சேவல், கோழி பலி பாலமலை அடிவாரத்தில் பகீர்
ADDED : நவ 23, 2024 03:14 AM
பவானி: அம்மாபேட்டை அருகேயுள்ள நெருஞ்சிப்பேட்டை குண்-டாங்கல் தோட்டத்தை சேர்ந்தவர் முருகேசன், 44; நெருஞ்சிப்-பேட்டை பேரூராட்சி, 12வது வார்டுக்கு உட்பட்ட பாலமலை அடிவாரத்தில் விவசாய நிலம் உள்ளது. அங்கு கம்பிவலை அமைத்து, கட்டு சேவல், நாட்டுக்கோழி வளர்த்து விற்பனை செய்து வருகிறார். தற்போது, 200க்கும் மேற்பட்ட சேவல் மற்றும் கோழிகள் வளர்த்து வந்தார். நேற்று காலை வழக்கம்-போல தோட்டத்துக்கு சென்றார். கம்பி வலைக்குள் இருந்த சேவல் மற்றும் நாட்டுக்கோழிகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, 20க்கும் மேற்-பட்ட கட்டுசேவல், 10க்கும் மேற்பட்ட கோழிகள் பலியானது தெரிந்தது. தகவலின்படி ஆரியாகவுண்டனுார் வி.ஏ.ஓ., வீரமுத்து சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
இதுகுறித்து, விவசாயி முருகேசன் கூறியதாவது:
கம்பி வேலிக்கு அடியில் நிலத்தை பறித்து அதன் வழியாக உள்ளே புகுந்த மர்ம விலங்கு, கோழிகளை கடித்து கொன்றுள்-ளன. 30க்கும் மேற்பட்ட சிறிய ரக கோழிகளை விலங்கு சாப்பிட்-டுள்ளது. பெரிய ரக கட்டுசேவல், நாட்டுக்கோழிகளை கடித்து கொன்றுள்ளது. நான்கு கிலோ எடையுள்ள ஒரு கட்டுசேவல், 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான, 40க்கும் மேற்பட்ட சேவல், நாட்டுக்கோழி இறந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மர்ம விலங்கு குறித்து, மேட்டூர் வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.