/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாலமலை அடிவாரத்தில் மர்ம விலங்கால் அச்சம்
/
பாலமலை அடிவாரத்தில் மர்ம விலங்கால் அச்சம்
ADDED : ஜூன் 21, 2025 01:01 AM
பவானி, அம்மாபேட்டை அருகே பாலமலை மற்றும் அதை ஒட்டிய வனப்பகுதி அடிவாரத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆடு, மாடு வளர்ப்பும் பிரதானமாக உள்ளது.
கடந்த சில நாட்களாக மலை அடிவார தோட்டத்து பகுதிகளில், மர்ம விலங்கு நடமாடி வருகிறது. இதனால் ஆடு, கோழி காணாமல் போவது அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கொடம்பக்காடு பகுதியில் உள்ள நடராஜ் வீட்டில், கட்டியிருந்த நாயை கூட கடித்து குதறியுள்ளது. இதுவரை இவர் வளர்த்து வந்த நான்கு நாய்களை மர்ம விலங்கு கொன்றுள்ளது.
இப்பகுதியில் முனுசாமி, நெருஞ்சிப்பேட்டை அருகே ராமன், சத்தியமூர்த்தி ஆகியோரின் ஆடுகளையும் மர்ம விலங்கு கடித்து குதறியுள்ளது. மர்ம விலங்கு நடமாட்டத்தால் மலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, மர்ம விலங்கு நடமாட்டத்தை கண்காணித்து பிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.