/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாயமான மூதாட்டி வனத்தில் சடலமாக மீட்பு
/
மாயமான மூதாட்டி வனத்தில் சடலமாக மீட்பு
ADDED : டிச 11, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாயமான மூதாட்டி
வனத்தில் சடலமாக மீட்பு
சத்தியமங்கலம், டிச. 11-
சத்தியமங்கலத்தை அடுத்த குத்தியாலத்துார் காப்பு காடு குரும்பன் குட்டை பகுதியில், நேற்று முன்தினம் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்தது.
சத்தி போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். திருப்பூர் மாவட்டம் கரட்டாங்காட்டை சேர்ந்த சாத்தியம்மாள், 70; சிறிது மனநிலை பாதித்தவர் என்று தெரிந்தது.
வடவள்ளி, அட்டமொக்கை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்தவர் கடந்த, 5ம் தேதி வீட்டில் இருந்து மாயமானதும் தெரிந்தது. உடற்கூறு பரிசோதனைக்கு பிறகே, அவர் சாவுக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

