தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மனைவி சாவில் மர்மம்; கணவன் மீது புகார்

மனைவி சாவில் மர்மம்; கணவன் மீது புகார்

மனைவி சாவில் மர்மம்; கணவன் மீது புகார்


ADDED : நவ 06, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோட்டை அடுத்த கொங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா, 33; கெமிக்கல் நிறுவன ஊழியர். இவரின் மனைவி நாகபட்டினத்தை சேர்ந்த வினோமியா, 33; இருவருக்கும், 2021ல் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர்.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த, 3ம் தேதி இரவு வினோமியா, வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. சித்தோடு போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் வினோமியா உறவினர்கள், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு நேற்று வந்தனர். அவர் சாவில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்தனர். 'வரதட்சனை கேட்டு மனைவியை ராஜா பலமுறை அடித்து பிரச்னை செய்துள்ளார். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதுகுறித்து கேட்ட நிலையில் தான் வினோமியா இறந்துள்ளார்' என்று குற்றம் சாட்டினர். அனைவரும் சத்தமிட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு மருத்துவமனை போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை, ஆர்.டி.ஓ. விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்ணின் உடற்கூறாய்வு கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு காரணம் குறித்து ஆராயப்படும் என உறுதியளித்தனர். இதற்கிடையில் பெண்ணின் உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர்.

ராஜாவுக்கு பெண்களுடனான தொடர்பு குறித்து ஓராண்டுக்கு முன் சித்தோடு போலீஸ் ஸ்டேஷனில் வினோமியா புகாரளித்துள்ளார். இருவரையும் அழைத்து சமாதானம் பேசி, எழுதி வாங்கி கொண்டு அனுப்பியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us