/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடுகளை கொன்ற விலங்கு நம்பியூர் விவசாயிகள் பீதி
/
ஆடுகளை கொன்ற விலங்கு நம்பியூர் விவசாயிகள் பீதி
ADDED : நவ 03, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர், நவ. 3-- -
நம்பியூர் அருகேயுள்ள இருகாலுார் பிரிவு, பழைய அய்யம்பாளையத்தை சேர்ந்த விவசாயி மாரப்பன், 80; தோட்டத்தில் ஆடு, மாடு வளர்த்து வருகிறார். இதில் நேற்று முன்தினம் மூன்று செம்மறி ஆடுகள் மர்மமாக இறந்து கிடந்தன. மாரப்பன் புகாரின்படி விளாமுண்டி வனத்துறையினர் அங்கு சென்றனர். ஆடுகளை கடித்து கொன்ற விலங்கு, தெருநாயா அல்லது வேறு ஏதேனுமா? என்று ஆய்வில் ஈடுபட்டனர். ஆடுகளை கொன்ற மர்ம விலங்கால், அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.