/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நம்பியூர் குமுதா பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு
/
நம்பியூர் குமுதா பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு
நம்பியூர் குமுதா பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு
நம்பியூர் குமுதா பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு
ADDED : அக் 21, 2024 07:22 AM
ஈரோடு: இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும், 68வது தேசிய அளவிலான, 17 வயதுக்கு உட்பட்டோர் கையுந்து பந்து போட்டிக்கான தேர்வு, நாமக்கல் மாவட்டத்தில் நடந்தது. இதில் நம்பியூர் குமுதா பள்ளி பிளஸ் 1 மாணவிகள் கனிஷ்கா, ரித்திகா தமிழக அணிக்கு தேர்வாகி சாதனை படைத்தனர். உ.பி., மாநிலத்தில் அடுத்த மாதம் நடக்கும் போட்டியில், தமிழக அணிக்காக விளையாடுவர். இதேபோல், 19 வயதுக்கு உட்பட்ட, 55 கிலோ முதல் 57 கிலோ வரையிலான, மல்யுத்த போட்டியில், குமுதா பள்ளியின் பிளஸ் ௧ மாணவி நேத்ரா, தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய போட்டிகளுக்கு தேர்வான மாணவிகளை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.