/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளஸ் 2 பொதுத்தேர்வில் நம்பியூர் குமுதா மெட்ரிக் அபாரம்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வில் நம்பியூர் குமுதா மெட்ரிக் அபாரம்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் நம்பியூர் குமுதா மெட்ரிக் அபாரம்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் நம்பியூர் குமுதா மெட்ரிக் அபாரம்
ADDED : மே 12, 2025 03:21 AM
நம்பியூர்: பிளஸ் ௨ பொதுத்தேர்வில், நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்-நிலைப் பள்ளி மாணவன் சபரி கிருஷ்ணா, 586 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். கணிதம், கணினி அறிவியலில் தலா மூன்று பேர், கணினி பயன்பாட்டில் ஆறு பேர், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா ஒரு மாணவரும், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். தேர்வெழுதிய அனைத்து மாண-வர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தனர். தேர்வெழுதிய, 106 மாணவர்களில், 20 பேர், 550 மதிப்பெண்களுக்கு மேலும், 51 பேர், 500 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி தாளாளர் ஜனகரத்தினம் பாராட்டி பரிசு வழங்கினார்.
நிகழ்வில் துணை தாளாளர் சுகந்தி, பள்ளி செயலர் டாக்டர் அர-விந்தன், இணை செயலர் டாக்டர் மாலினி, விளையாட்டு இயக்-குனர் பாலபிரபு. பள்ளி முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள்
பாராட்டினர்.