/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துப்பாக்கி சுடும் போட்டியில் நம்பியூர் குமுதா பள்ளி அபாரம்
/
துப்பாக்கி சுடும் போட்டியில் நம்பியூர் குமுதா பள்ளி அபாரம்
துப்பாக்கி சுடும் போட்டியில் நம்பியூர் குமுதா பள்ளி அபாரம்
துப்பாக்கி சுடும் போட்டியில் நம்பியூர் குமுதா பள்ளி அபாரம்
ADDED : செப் 27, 2025 01:37 AM
ஈரோடு, சென்னை துப்பாக்கி சுடுதல் கழகத்தின் சார்பாக, 50வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னையில் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில், ௧௦ மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில், ஆண்கள் யூத் மற்றும் சப்--யூத் பிரிவில் நம்பியூர் குமுதா பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் ரிஷிக் ஆர்யா, பெண்கள் சப்- யூத் பிரிவில் பிளஸ் ௧ மாணவி ரிதன்யா வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கும் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கும் தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர்.
இருவரையும் குமுதா பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளி செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.