/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நம்பியூர் குமுதா பள்ளி மாணவர்கள் மாநில வாள்வீச்சு போட்டிக்கு தேர்வு

ADDED : ஜன 26, 2025 04:40 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட அளவிலான வாள்வீச்சு போட்டி, நம்பியூர் குமுதா கல்வியியல் கல்லுாரியில் நடந்தது. இதில் பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி மாணவன் அபிஷேக், 14 வயது பிரிவில் இரு பிரிவுகளில் இரண்டாமிடம், பாயில் போட்டியில் நித்திஸ்வர் இரண்டாமிடம், பாரதி கண்ணன் மூன்றாமிடம் பெற்றனர்.
17 வயது மாணவர் பிரிவில் தருண் பிரசாத், எப்பி போட்டியில் முதலிடம், பாயில் போட்டியில் விகாஸ் முதலிடமும் பிடித்தனர். 17 வயது மாணவியர் பிரிவில் எப்.பி., போட்டி
யில் அனகா முதலிடம் பெற்றார். குழு போட்டிகளில், 17 வயது மாணவர்கள் பிரிவில், சேபர் போட்டியில் முதலிடம்; 14 வயது மாணவர் குழு பிரிவில், எப்பி போட்டியில் இரண்டாமிடம் பெற்றனர். இதன்மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடக்கும் மாநில வாள் வீச்சு போட்டிகளுக்கு, இவர்கள் தகுதி பெற்றனர். மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்-களைப் பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, செயலர் டாக்டர் அரவிந்தன், இணை செயலர் டாக்டர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.