/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநில அளவிலான கட்டுரை போட்டி நம்பியூர் பள்ளி மாணவி 3வது இடம்
/
மாநில அளவிலான கட்டுரை போட்டி நம்பியூர் பள்ளி மாணவி 3வது இடம்
மாநில அளவிலான கட்டுரை போட்டி நம்பியூர் பள்ளி மாணவி 3வது இடம்
மாநில அளவிலான கட்டுரை போட்டி நம்பியூர் பள்ளி மாணவி 3வது இடம்
ADDED : ஜூன் 23, 2025 05:16 AM
நம்பியூர்: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பாக ஒன்பது முதல் பிளஸ் ௨ வரையிலான மாணவ, மாணவியருக்கு, அகத்திய மாமுனிவர் குறித்த கட்டுரை போட்டி, மாநில அளவில் சென்-னையில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்-டனர்.
இதில் நம்பியூர் குமுதா பள்ளி பிளஸ் ௨ மாணவி மேகவர்ஷினி, மூன்றாமிடம் பிடித்து, 10,000 ரூபாய் பரிசு வென்றார். கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழக ஆளுநர் ரவி, பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.
விழாவில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத்த-லைவர் டாக்டர் சுதா சேஷய்யன், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமக்கோடி வீழிநாதன், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் புவனேஸ்வரி, இயக்குனர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஆளுனர் மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. மாணவியை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்-தினம் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.