ADDED : நவ 01, 2024 01:38 AM
நம்ம ஈரோடை' செல்பி பாயின்ட்
ஈரோடு, நவ. 1-
ஈரோடு மாநகராட்சியின் மைய அலுவலக முன், 'நம்ம ஈரோடை' என்ற செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செல்பி பாயின்ட் டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக, சென்னை, கோவை நாமக்கல், திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் பிரம்மாண்டமான செல்பி பாயின்ட்டுகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் செல்பி எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை செல்பி பாயின்ட் அமையவில்லை. இந்த குறையை போக்கும் வகையில், ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தின் முன்புறம், செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி கமிஷனர் மணிஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், 1வது மண்டல தலைவர் பழனிசாமி, தி.மு.க., மாநகர செயலர் சுப்பிரமணியம், தலைமை பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.