/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நந்தா கலை கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
நந்தா கலை கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : ஜன 26, 2025 04:07 AM
ஈரோடு: ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லுா-ரியின், 20வது பட்டமளிப்பு விழா நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்-கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். கோவை பார-தியார் பல்கலை பதிவாளர் (பொறுப்பு), ரூபா குணசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், விழாவை
தொகுத்து வழங்கினார். நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் மற்றும் நிர்-வாக அலுவலர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். நந்தா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் மனோகரன் ஆண்டறிக்கை வாசித்தார். பாரதியார் பல்கலை தர வரிசையில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற முதுகலை பிரிவு இயற்பியல் துறை மாணவி சஸ்மிதா, இளங்கலை பிரிவு வணிகவியல் நிறும செயலரியல் துறை வைஷ்ணவி, வேதியியல் துறை ஸ்ரீலேகா, ஆங்கில துறை சங்கீதா மற்றும் பல்கலை தர வரிசையில் இடம் பெற்ற 19 மாணவ-, மாணவியர் உட்பட, 895 பேருக்கு, ரூபா குணசீலன்
பட்டம் வழங்கி பேசினார்.

