/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளி விழா ஆண்டில் நந்தா பொறியியல் கல்லுாரி
/
வெள்ளி விழா ஆண்டில் நந்தா பொறியியல் கல்லுாரி
ADDED : ஆக 30, 2025 01:19 AM
ஈரோடு, ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரி தனது, 25வது ஆண்டில் பெருமையுடன் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, அதற்கான சின்னத்தினை நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் வெளியிட்டார். பின் அவர், மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கை தரத்தை மனதில் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லுாரியானது, 25வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி.
ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்கள், மாணவர்கள், முதல்வர்கள், நிர்வாக அலுவலர்கள், புலமுதல்வர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைத்து துறை சார்ந்த பணியாளர்களுக்கும், வெள்ளி விழா ஆண்டில் புதியதாக இணைந்துள்ள மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
நந்தா கல்வி நிறுவன செயலர் திருமூர்த்தி, கல்லுாரியின் வளர்ச்சி பற்றிய தகவல்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். கல்லுாரி முதல்வர் ரகுபதி, 2001ம் ஆண்டில் முதலாவதாக இணைந்து கல்வி பயின்று பணியாற்றிவரும் முன்னாள் மாணவர்களும், உதவி பேராசிரியர்களான மகேஸ்வரி, பரமேஸ்வரி மற்றும் முதன்மை நுாலகர் சடகோபன், மாணவர்கள் விவகாரத் துறை பேராசிரியர் மூர்த்தி மற்றும் வெள்ளி விழா முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று பேசினார்.
நந்தா கல்வி அறக்கட்டளை அங்கத்தினர் பானுமதி சண்முகன், செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், 'எம்பவர் ெஹர்' மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் விதுஷா மூர்த்தி, மோஹிந்த் பிரசன்னா மற்றும் நந்தா தொழில் நுட்ப வளாக நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர் பேசினர். பேராசிரியர் திருநீலகண்டன் நன்றி கூறினார்