/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நஞ்சனாபுரம் கொங்கு கலை கல்லுாரி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
/
நஞ்சனாபுரம் கொங்கு கலை கல்லுாரி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
நஞ்சனாபுரம் கொங்கு கலை கல்லுாரி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
நஞ்சனாபுரம் கொங்கு கலை கல்லுாரி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
ADDED : ஜூன் 29, 2025 01:03 AM
ஈரோடு, -ஈரோடு நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது. பெருந்துறை கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்லுாரி அறக்கட்டளை தலைவர் குமாரசுவாமி தலைமை வகித்தார். செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி தாளாளர் தங்கவேல் வரவேற்றார். கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் சுவாமி யோகா மிருதானந்தர், கோவையை சேர்ந்த தன்னம்பிக்கை பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
கொங்கு வேளாளர் தொழில்நுட்பகல்லுாரி அறக்கட்டளை பாராம்பரிய பாதுகாவலர் பழனிசாமி வாழ்த்தி பேசினார். கல்லுாரி இறுதித்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ-ர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கொங்கு என்ஜினியரிங் கல்லுாரி தாளாளர் இளங்கோ, கொங்கு பாலிடெக்னிக் மற்றும் நேச்சுரோபதி அண்ட் ஹோமியோபதி மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை தாளாளர் வெங்கடாசலம், கொங்கு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.