ADDED : மே 31, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: 'ஆப்பரேஷன் சிந்துார்' மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த, இந்திய ராணுவ வீரர்களுக்கு, வீரவணக்கம் செலுத்தும் விதமாக, தேச ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, பெருந்துறையில் நேற்று மாலை தேசியக்கொடி ஏந்தி பேரணி நடந்தது. புது பஸ் ஸ்டாண்ட்டில் தொடங்கிய பேரணியில், பா.ஜ., பெருந்துறை நகர தலைவர் பூர்ணசந்திரன் தலைமையில், ஏராளமான மக்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் கையில் தேசியக்கொடி ஏந்தி பங்கேற்றனர்.
ராஜவீதி, பஜனை கோவில் வீதி, குன்னத்துார் ரோடு, பவானி மெயின் ரோடு, பங்களா வீதி, ஈரோடு ரோடு, போலீஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனை வழியாக சென்று, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் நிறைவடைந்தது.