ADDED : ஆக 15, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், இந்தியாவின், 78 வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர நாளை முன்னிட்டு, வீடுகள் தோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
இதையடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.. சார்பில், மக்களிடையே சுதந்திர தின விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் நேதாஜி சிலையில் இருந்து உழவர்சந்தை எதிரில் உள்ள காந்திசிலை வரை கட்சியினர் தேசியக்கொடியுடன் பேரணி சென்றனர்.மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார். கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன், நகர தலைவர் தினேஷ் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் பலர் பேரணியில் பங்கேற்றனர்.