நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தமிழக அரசின் பொது நுாலக இயக்கத்தின், ஈரோடு மாவட்ட கிளை நுாலகம் மற்றும் கொல்லம்பாளையம் வாசகர் வட்டம் சார்பில், 58வது தேசிய நுாலக வாரவிழா நடந்தது. ஈரோடு மாவட்ட நூலக அலுவலர் சாமிநாதன் தலைமை வகித்தார்.
மாநகராட்சி கவுன்சிலர்கள் சக்திவேல், குணசேகரன் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ, மாணவியருக்கான நுால் மதிப்புரை போட்டியில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு 'இளம் நுால் ஆர்வலர்' விருது வழங்கப்பட்டது. இதேபோல் மாணவர்களை ஊக்குவிக்கும் ஆசியர்களுக்கு 'நுால் வாசிப்பு ஊக்குவிப்பு' விருதும், வாசிப்பு பழக்கத்தை தொடரும் மூத்த வாசகர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நல் நுாலகர் ஷர்மிளா செய்திருந்தார்.

