ADDED : செப் 18, 2025 01:37 AM
ஈரோடு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில், தேசிய ஊட்டச்சத்து வாரவிழா கடந்த ஒரு வாரமாக, ஊட்டச்சத்து மறுவாழ்வு மையம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடந்தது.
செவிலியர் பயிற்சி கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்ற போட்டி நடந்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். உறைவிட மருத்துவ அதிகாரி சசிரேகா முன்னிலை வகித்தார். ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி ஏற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. நெருப்பில்லாத சமையல் என்ற தலைப்பில், ஊட்டச்சத்து உணவு தயாரிப்பு குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி பூங்கோதை, செவிலியர் கண்காணிப்பாளர் சகிலா ஆகியோர் பேசினர்.