/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கு கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
/
கொங்கு கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
ADDED : மார் 02, 2024 03:08 AM
ஈரோடு: மத்திய அரசின் உயிரி தொழில் நுட்பத்துறை நட்சத்திர கல்லுாரி திட்டம் மற்றும் கணிதத்துறை சார்பில், ஈரோடு அருகே நஞ்சனாபுரம், கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில், தனித்துவமான கணிதத்தின் சமீபத்திய போக்குகள் என்ற, தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி தாளாளர் தங்கவேல் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் கணிதவியல் மூத்த பேராசிரியர் தமிழ் செல்வம், புதுச்சேரி பல்கலை ராமானுஜன், கணித அறிவியல் பள்ளி இணைப் பேராசிரியர் ஆசீர் ஆகியோர், கணிதத்தின் சமீபத்திய போக்குகள் பற்றி சிறப்புரையாற்றினர். பல்வேறு கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள்
பங்கேற்றனர்.
இதில் நட்சத்திர கல்லுாரி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வித்யா, கணிதத்துறை தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

