/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பழனி கோவில் சார்பில் நா.சர்க்கரை கொள்முதல்
/
பழனி கோவில் சார்பில் நா.சர்க்கரை கொள்முதல்
ADDED : ஆக 10, 2025 01:23 AM
ஈரோடு, கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாட்டு சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை ரூ.31.28 லட்சத்துக்கு பழனி கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நாட்டு சர்க்கரை, வெல்லம் விற்பனை நடந்தது. விவசாயி கள், 2,868 மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 60 கிலோ எடை கொண்ட முதல் தரம் நாட்டு சர்க்கரை, 2,895 முதல், 3,000 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம், 2,700 முதல், 2,790 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், 67 ஆயிரத்து, 380 கிலோ எடையுள்ள நாட்டு சர்க்கரை, 30 லட்சத்து, 96 ஆயிரத்து, 450 ரூபாய்க்கு விற்பனையானது.
அதுபோல உருண்டை வெல்லம், 30 கிலோ சிப்பம், 1,620 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 600 கிலோ எடை கொண்ட உருண்டை வெல்லம், 32 ஆயிரத்து, 400 ரூபாய்க்கு விற்பனையானது. கரும்பு சர்க்கரை, உருண்டை வெல்லம் சேர்ந்து, 31 லட்சத்து, 28 ஆயிரத்து, 850 ரூபாய்க்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் கொள்முதல் செய்துள்ளனர்.

