ADDED : மே 17, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு காஷ்மீர் பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து பாக்., மீது தொடுக்கப்பட்ட 'ஆப்ரேஷன் சிந்துார்' மூலம் தேச பாதுகாப்பு, ஒற்றுமையை நிலை நாட்டிய, இந்திய ராணுவத்தின் முப்படை வீரர்கள், பிரதமர் உள்ளிட்டோருக்கு நன்றி செலுத்தும் விதமாக, 'தேசிய கொடியேந்தி தேச ஒற்றுமை பேரணி' நடந்து வருகிறது.
இதன்படி ஈரோட்டில் நேற்று நடந்தது. வ.உ.சி., பூங்கா வளாகத்தில் இருந்து தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பிலான பேரணியை, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை ரவுண்டானா, இடையன்காட்டுவலசு சாலையில் நிறைவடைந்தது.பேரணியில் மாவட்ட தலைவர் செந்தில், நிர்வாகிகள் பழனிசாமி, த.மா.கா., நிர்வாகிகள் யுவராஜா, சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.