/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காமதேனு கலை கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
/
காமதேனு கலை கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
காமதேனு கலை கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
காமதேனு கலை கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
ADDED : பிப் 10, 2024 10:36 AM
ஈரோடு: சத்தியமங்கலம் காமதேனு கல்லுாரியின், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், பண்ணாரி அம்மன் திருக்கோவிலில் நடந்தது. கல்லுாரி நிறுவன தலைவர் பெருமாள்சாமி, செயலர் அருந்ததி தலைமை தாங்கினர். கல்லுாரி முதல்வர் குருமூர்த்தி வரவேற்புரை வழங்கினார். முகாமிற்கு சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையாளர் மேனகா வாழ்த்துரை வழங்கினார்.
முகாமில் கோவில்சுற்று புறத்துாய்மை, வன சாலைகளில் நெகிழிகளை அப்புறப்படுத்துதல், இலவச கண் பரிசோதனை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், விழிப்புணர்வு பணிகளில், இருநுாறுக்கும் மேற்பட்ட மாணவர் ஈடுபட்டனர். நிறைவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அழகேந்திரன் நன்றி கூறினார்.