sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு நா.த.க.,வினர் வாக்குவாதம்

/

பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு நா.த.க.,வினர் வாக்குவாதம்

பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு நா.த.க.,வினர் வாக்குவாதம்

பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு நா.த.க.,வினர் வாக்குவாதம்


ADDED : ஜன 30, 2025 05:01 AM

Google News

ADDED : ஜன 30, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில், தெருமுனை கூட்டத்துக்கு இடம் கொடுப்பது தொடர்பாக, இன்ஸ்பெக்டருடன் நாம் தமிழர் கட்சியினர் வாக்கு-வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நா.த.க.,வேட்பாளர் சீதாலட்சுமி, நேற்று ஈரோடு குமலன் குட்டை பகுதியில் தெரு-முனை பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு இருந்தார். தேர்தல் கமிஷனில் அனுமதியும் வழங்கப்பட்டு இருந்தது. அங்-குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம், வேன் பிரசாரம் செய்ய மைக் செட்கள், விளக்குகளை அமைக்க துவங்கினர். பள்-ளிக்கு முன் வேன் பிரசாரம் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. தெரு-முனை கூட்டத்துக்கு அனுமதி கேட்ட நிலையில் வேன் பிரசாரம் செய்ய கூடாது.

வேறு இடத்துக்கு கூட்டத்தை மாற்றி கொள்ள வேண்டும் என்று வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் பிரபு தெரிவித்தார். இதனால் நாம் தமிழர் கட்சியின-ருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இந்நிலையில் பள்ளி நேரம் முடிந்து மாணவ, மாணவியர் வெளி-யேறினர். இதனால் சிறிது நேரத்துக்கு பின், பள்ளி முன்புறம் வேன் பிரசாரம் செய்ய இன்ஸ்பெக்டர் அனுமதித்தார். இதைய-டுத்து, நா.த.க.,வினர் பிரசார பணிகளை தொடர்ந்தனர்.






      Dinamalar
      Follow us