ADDED : ஜூன் 22, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம் தாராபுரத்தில் நேற்று நடந்தது. கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ் பங்கேற்றார். திருப்பூர் மாவட்ட செயலாளர் வக்கீல் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
கட்சி வளர்ச்சிப்பணி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் மோகன்ராஜ், தொண்டரணி நிர்வாகி கணேஷ் பேசினர். தாராபுரம், உடுமலை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் அண்ணாதுரை, ராமச்சந்திரன், தாராபுரம் நகர செயலாளர் ரஞ்சித்குமார், முனியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.