ADDED : ஜூலை 08, 2026 05:01 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டம் அறச்சலுார் வன விரிவாக்க மையம் சார்பில், விவசாயிகளுக்கு
நேரடியாக பலன் தரும் மரக்கன்றுகளை நடவு செய்து தருகின்றனர்.
முறையாக பராமரிப்பு செய்தால் போதுமானது. தேக்கு, மகாகனி,
மலைவேம்பு மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
தொழிற்சாலைகள்,
கல்வி நிறுவனங்கள்,கோவில் நிலங்கள், பொது இடங்களில் நாவல், நாட்டு
வேம்பு, புளியமரம், புங்கன், நீர் மருது, வாகை, மகிழம், தான்றி,
கொடுக்காப்புளி, ஆலமரம், பாதாம், வேங்கை மரங்கள் நடவு செய்து
தரப்படும்.
இதற்கு ஆதார் கார்டு, பட்டா சிட்டா அடங்கல், வங்கி பாஸ்
புத்தக ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் வனவர்
அழகிரிசாமியை 99659-66807, 76390-96201 என்ற எண்களில் தொடர்பு
கொள்ளலாம்.
