/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
.நோய் பரப்பும் மையமாகும் நேதாஜி காய்கறி மார்க்கெட்
/
.நோய் பரப்பும் மையமாகும் நேதாஜி காய்கறி மார்க்கெட்
.நோய் பரப்பும் மையமாகும் நேதாஜி காய்கறி மார்க்கெட்
.நோய் பரப்பும் மையமாகும் நேதாஜி காய்கறி மார்க்கெட்
ADDED : நவ 18, 2024 03:30 AM
ஈரோடு: ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில், மழை பெய்தால் நீர் வடியாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் காய்கறி கடை அமைக்கும் வியாபாரிகள் மட்டுமின்றி, மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் மக்களும் அவதிக்கு ஆளாவது தொடர் கதையாக உள்ளது. மாநகரில் கடந்த, 15, 16ல் கன மழை கொட்டியது.
அப்போது பல்வேறு பகுதிகளிலும் தேங்கிய மழை நீர் மெல்ல, மெல்ல வடிந்தது. ஆனால் மார்க்கெட்டில் பல இடங்களில் வடி-யாமல் குளம் போல் தேங்கியுள்ளது. மேலும் மார்க்கெட்டின் பெரும்பாலான இடம் சேறு, சகதியுமாக நேற்று மதியம் வரை காட்சியளித்தது. இதனால் மார்க்கெட் வளாகம், நோய் பரப்பும் மையமாக உருவெடுத்துள்ளது. இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்-வாகம் விரைவில் உரிய தீர்வு காண, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.