sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காடையீஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

/

காடையீஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

காடையீஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

காடையீஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்


ADDED : பிப் 09, 2026 08:19 AM

Google News

ADDED : பிப் 09, 2026 08:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காடையூரில், பிரசித்தி பெற்ற காடையீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் ஏற்கனவே இருந்த தேருக்கு பதிலாக இரும்பு சக்கரங்களுடன் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.

பழமை மாறாமல் விநாயகருக்கு சிறிய தேரும், காடையீஸ்வரன் மற்றும்பங்கசாட்சியம்மனுக்கு பெரிய தேரும் என இரு தேர் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வெள்ளோட்டம் நடந்தது. முன்னதாக காலை, 9:௦௦ மணியளவில் பூர்வாங்க கிரியைகளுடன் விநாயகர் வழிபாடு, யாக பூஜை நடந்தது. மதியம், 3;00 மணிக்கு மேல் தேர்களுக்கு கலசாபிஷேகம் நடந்தது.

இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், புதிய தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். பக்தி கோஷத்துடன் மேளதாளங்கள் முழங்க, கோவிலை சுற்றி வந்து தேர் நிலை அடைந்தது. திருப்பூர் மட்டுமின்றி ஈரோடு, கோவை, நீலகிரி, திண்டுக்கல், கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us