/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆயுதப்படை போலீசாருக்கு புது தொப்பி
/
ஆயுதப்படை போலீசாருக்கு புது தொப்பி
ADDED : நவ 26, 2024 01:35 AM
ஆயுதப்படை போலீசாருக்கு புது தொப்பி
ஈரோடு, நவ. 26-
தமிழக காவல்துறையில் உயர் போலீஸ் உயரதிகாரிகள், மாவட்டத்துக்கு வருகை தரும்போது, ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்வது வழக்கம். இது தவிர முதல்வர், பிரதமர், ராணுவ அமைச்சர், ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஆயுதப்படை போலீசார் தொப்பி அணிந்து பங்கேற்பர்.
சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இதுபோன்ற அணிவகுப்புகளில், பகுடி என்ற தொப்பியை ஆயுதப்படை போலீசார் பயன்படுத்துகின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது வழக்கமான தொப்பியை பயன்படுத்துகின்றனர். இம்முறை ஈரோடு மாவட்டத்திலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி நேற்று பகுடி தொப்பி அணிந்த ஆயுதப்படை போலீசார், அலுவலகத்துக்கு வந்த எஸ்.பி., ஜவகருக்கு மரியாதை செலுத்தினர்.