/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழந்தை திருமணத்தைதெரிவிக்க புதிய எண் வெளியீடு
/
குழந்தை திருமணத்தைதெரிவிக்க புதிய எண் வெளியீடு
ADDED : டிச 27, 2024 01:28 AM
ஈரோடு, டிச. 27-
ஈரோடு மாவட்டத்தில், குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிவிக்க, புதிய மொபைல் எண், 89031 67788 முன்னோட்ட அடிப்படையில் வெளியிட்டுள்ளனர்.
குழந்தை திருமணம் செய்யும் நபருக்கு, 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். பெண்களுக்கு, 18 வயது, ஆண்களுக்கு, 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். குழந்தை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும் பெற்றோர், உறவினர்கள், மணம் முடித்து வைக்கும் பூசாரி அல்லது குருமார்கள், திருமணம் நடக்கும் மண்டபம், சமுதாய கூடம் போன்றவற்றின் உரிமையாளர்களும் தண்டனைக்குரியவர்கள். குழந்தை திருமண தடை சட்டப்படி, அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்.
குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்: 1098, மகளிர் உதவி இலவச அழைப்பு எண்: 181, ஆகியவை ஏற்கனவே செயல்படுகின்றன.
குழந்தை திருமணங்களை தடுக்க, தகவல் அளிப்போரை ஊக்கப்படுத்த, 3,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படுகிறது.