/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரிக்கு புதிய முதல்வர்
/
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரிக்கு புதிய முதல்வர்
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரிக்கு புதிய முதல்வர்
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரிக்கு புதிய முதல்வர்
ADDED : ஜூலை 11, 2025 01:05 AM
ஈரோடு, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரி புதிய முதல்வராக முனைவர் பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 25 ஆண்டுகள் கொங்கு பொறியியல் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். 45 எஸ்.சி.ஐ., உட்பட புகழ் பெற்ற சர்வதேச இதழ்களில், 65 ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டுள்ளார்.
மேலும் தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளில், 70க்கும் மேற்பட்ட கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். நான்கு புத்தக அத்தியாயங்களை எழுதியுள்ளார். கடந்த, 2010 முதல் 2019 வரை கொங்கு பொறியியல் கல்லுாரியின் மெக்கட்ரானிக்ஸ் பொறியியல் துறை தலைவராக
பணியாற்றியுள்ளார்.
டீ.பி.ஐ., மூலம் தொழிற்சாலை சார்ந்த திறன்களை வளர்க்கவும், உறுதியான அடித்தளங்களை உருவாக்கவும் செயல்பட்டார். இவருக்கு கல்லுாரி தாளாளர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து
தெரிவித்தனர்.