/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையை தலைமையிடமாக்கி புது தாலுகா பணி தீவிரம்; விரைவில் அறிவிப்பு
/
சென்னிமலையை தலைமையிடமாக்கி புது தாலுகா பணி தீவிரம்; விரைவில் அறிவிப்பு
சென்னிமலையை தலைமையிடமாக்கி புது தாலுகா பணி தீவிரம்; விரைவில் அறிவிப்பு
சென்னிமலையை தலைமையிடமாக்கி புது தாலுகா பணி தீவிரம்; விரைவில் அறிவிப்பு
ADDED : ஜன 02, 2024 12:13 PM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலையை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகா உருவாக்க அரசு பரிந்துரைத்து, அதற்கான பணிகளை விரைவுபடுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, அந்தியூர் என, 10 தாலுகாக்கள் உள்ளன. இதில் நம்பியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி, தாளவாடி தாலுகாக்கள், அ.தி.மு.க., ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டன.
தற்போதுள்ள சூழலில் பெருந்துறை தாலுகா
மிக அதிக பரப்பு, வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இதில்
சென்னிமலை யூனியனில் பல பகுதி, திருப்பூர் மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளன. மேலும் பெருந்துறை சட்டசபை தொகுதி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள
ஊத்துக்குளியை உள்ளடக்கியுள்ளது.
இந்நிலையில் நிர்வாக வசதிக்காக பெருந்துறை தாலுகாவை இரண்டாக பிரிக்க வேண்டும். சென்னிமலை டவுன் பஞ்சாயத்து, பெருந்துறை டவுன் பஞ்சாயத்தை நகராட்சியாக தரம் உயர்த்த பல ஆண்டாக கோரி வருகின்றனர். இதில் பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையத்தை இணைத்து நகராட்சியாக்கவும் வலியுறுத்துகின்றனர். இதற்கான பரிந்துரையும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பெருந்துறை தாலுகாவில் உள்ள சென்னிமலை யூனியன் பகுதி
உட்பட சில பகுதிகளை
தனியாக்கி, தாலுகாவாக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இதுபற்றி வருவாய் துறையினர் கூறியதாவது: சென்னிமலையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமையும்போது, பெருந்துறை தாலுகா மற்றும் சென்னிமலை தாலுகாவுக்குள், பெருந்துறை தொகுதி அமையும் வகையிலும், சென்னிமலை முழு தாலுகாவாக செயல்படும் வகையில், தேவையான கிராமங்களை இணைக்கவும் மாவட்ட நிர்வாகம் பட்டியலிட்டு வருகின்றனர். சட்டசபை, லோக்சபா தொகுதி, வருவாய் கிராமங்கள் மாறுபடாமல் இருக்கும் வகையில் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு கூறினர்.

