/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆருத்ரா விழாவில் புதுமண தம்பதியர் ஆர்வத்துடன் பங்கேற்பு
/
ஆருத்ரா விழாவில் புதுமண தம்பதியர் ஆர்வத்துடன் பங்கேற்பு
ஆருத்ரா விழாவில் புதுமண தம்பதியர் ஆர்வத்துடன் பங்கேற்பு
ஆருத்ரா விழாவில் புதுமண தம்பதியர் ஆர்வத்துடன் பங்கேற்பு
ADDED : ஜன 14, 2025 02:48 AM
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலின் துணை கோவிலான கைலாச-நாதர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவில் நேற்று முன்தினம் இரவு நடராஜ பெருமான், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபி-ஷேகம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதை தொடர்ந்து நேற்று காலை, 6:30 மணிக்கு தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநா-தசிவச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜை, அபிஷேகம், வழி-பாடு நடந்தது. இதன் பிறகு சுவாமி புறப்பாடு நடந்தது. நடராஜ
பெருமான், சிவகாமி அம்பாள், முருக பெருமான் சமேதராக எழுந்தருளி, சென்னிமலை நகரின் ராஜவீதிகளில் மேளதாளம் முழங்க திருவீதி உலா சென்றார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்-கேற்றனர். அதேசமயம் புதுமண
தம்பதியர் அதிகம் கலந்து கொண்டனர். நடராஜபெருமான், சிவகாமி அம்பாள், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.