sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜூன் 18, 2024 07:13 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏட்டுகளுக்கு பதவி உயர்வு

ஈரோடு: காவல்துறையில், 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு, எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 25 ஆண்டுகள் பணியாற்றிய ஏட்டுகள், பதவி உயர்வுக்கு காத்திருந்தனர். ஜூன், 1ல் பதவி உயர்வு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், லோக்சபா தேர்தல் நடத்தை விதியால் பதவி உயர்வு தாமதமானது. இந்நிலையில் மாவட்டத்தை சேர்ந்த, ௭௨ ஏட்டுக்களுக்கு, எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

வரட்டுபள்ளத்தில் 5.40 மி.மீ., மழை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பொழிவற்ற வானிலை காணப்படுகிறது. இந்நிலையில் வரட்டுபள்ளத்தில் நேற்று முன்தினம், 5.40 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் சத்தியில் 1, பவானிசாகரில், 3.60 மி.மீ., மழை பெய்தது. நேற்று ஈரோடு மாநகரில் பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்தது.

எருமையை கொன்ற புலி

சத்தியமங்கலம்: கடம்பூரை அடுத்த திங்களூர், டி.பி.தொட்டியை சேர்ந்த விவசாயி மாதேஸ்வாமி, 48; இவருக்கு சொந்தமான எருமைகளை, மந்தே தொட்டி பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அதில் ஒன்று வீடு திரும்பவில்லை. தேடிச்சென்ற போது வனப்பகுதிக்குள் உடல் கிடந்தது. புலி அடித்து கொன்றதாக புகார் எழுந்தது. தகவலின்படி சென்ற கேர்மாளம் வனத்துறையினர், அப்பகுதியில் ஆய்வு செய்ததில், புலி என்பதை உறுதி செய்தனர்.

கோபி யூனியன் அரசு பள்ளிகளில் 172 மாணவ, மாணவியர் சேர்க்கை

கோபி: கோபி யூனியனில் கோபி, அந்தியூர், நம்பியூர், டி.என்.பாளையம், சத்தி, பவானிசாகர், தாளவாடி என ஏழு யூனியன்களில், 383 துவக்கப்பள்ளிகள், 162 நடுநிலைப்பள்ளிகள் என, 545 பள்ளிகள், கோபி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த கல்வியாண்டில் இப்பள்ளிகளில், 3,119 மாணவ, மாணவியர் கல்வி பயின்றனர். நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்படி ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, இதுவரை மொத்தம், 172 மாணவ, மாணவியர், அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். ஜூலை மாதம் வரை, மாணவர் சேர்க்கை நடக்க வாய்ப்புள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

பண்ணாரி கோவிலில் இலவச திருமணம்

சத்தியமங்கலம்: இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் நடக்கும் திருமணங்களில், மணமக்களில் யாராவது மாற்றுத்திறனாளி எனில் அவர்களுக்கு, 4 கிராம் தாலி, புத்தாடை வழங்கி இலவசமாக திருமணம் நடத்தலாம் என அறிவிக்கப்பட்டது. இதன்படி சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், மாற்றுத்திறனாளி மணமகனுக்கு நேற்று இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு பயிற்சி

சென்னிமலை: தோட்டக்கலைத் துறை சார்பாக, சென்னிமலை யூனியன் புங்கம்பாடி அப்பத்தாள் கோவில் முன், விவசாயிகளுக்கு நாளை இலவச பயிற்சி நடக்கிறது. முகாமில் மண், தண்ணீர் பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே பயிற்சிக்கு வரும் விவசாயிகள், தங்கள் தோட்டத்தில் மண் மற்றும் நீர் எடுத்து வந்து, பரிசோதனை செய்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 88833-81084 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தோட்டகலை துறை உதவி இயக்குனர் அருட்செல்வன் தெரிவித்துள்ளார்.

நாளை குறைதீர் கூட்டம்

ஈரோடு: பெருந்துறை மின் கோட்டத்தில், மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது. கருமாண்டிசெல்லிபாளையம், சேனிடோரியத்தில் உள்ள மின் கோட்டத்தில் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்துக்கு, ஈரோடு மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமை வகிக்கிறார். இதில் பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், குன்னத்துார், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம் பகுதி மின் பயனீட்டாளர், குறை, கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.

நுாறு நாள் வேலை கேட்டு மனு

சத்தியமங்கலம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 100 நாட்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க கோரி, சதுமுகை ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், நேற்று மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்., மாதம் முதல் நுாறு நாள் வேலை, அனைத்து ஊராட்சிகளிலும் தடைபட்டு, தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்

ஈரோடு: பக்ரீத் பண்டிகையுடன் சனி, ஞாயிறு அடுத்தடுத்து வந்ததால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிடைத்த விடுமுறையால், குடும்பத்துடன் பலர் சொந்த ஊருக்கும், சுற்றுலாவாகவும் பல்வேறு ஊர்களுக்கு சென்றனர். இதனால் கடந்த, 14ம் தேதி மாலை பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. நேற்றுடன் விடுமுறை முடிந்தது. பள்ளி, அரசு அலுவலகங்கள் இன்று திறக்கப்படுவதால், விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்த பயணிகள், தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு நேற்று மாலை கிளம்பினர். இதனால் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நேற்றிரவு வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்பட்டது.

நீரில் மூழ்கி வாலிபர் சாவு

பவானி: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், கல்யாணநகரை சேர்ந்தவர் சுர்ஜித், 26; ஈரோட்டில் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்தார். இவரது அண்ணன் காமராஜ், 28; இவரின் நண்பர் சதீஷ். சித்தோடு அருகே லட்சுமி நகர் பகுதி காவிரி ஆற்றில், மூவரும் குளித்தனர். அப்போது சுர்ஜித் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுர்ஜித்தை மீட்டபோது இறந்து விட்டிருந்தார். சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலரில் மகனுடன் சென்ற தாய் சாவு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கொத்தமங்கலம், நெருஞ்சிபேட்டையை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், 35, தனியார் கம்பெனி ஊழியர். ஹோண்டா டூவீலரில் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். அவருடன் தாயார் மோட்சராணியும் பயணித்தார். திம்மையன் புதுார் அருகில் ஸ்பிளண்டர் பைக்கில் வந்த சதீஷ்குமார், ஸ்டீபன்ராஜின் பைக் மீது மோதினார். இதில் ட்சராணி, சதீஷ்குமார் படுகாயம் அடைந்தனர். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மோட்சராணி இறந்தார். இதுகுறித்து சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us