sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு


ADDED : ஜன 15, 2024 10:46 AM

Google News

ADDED : ஜன 15, 2024 10:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமுதா மெட்ரிக் பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்

நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம் முன்னிலை வகித்தனர். பாரம்பரிய முறைப்படி மண் பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டனர்.

மேலும், விழாவையொட்டி மாணவர்களுக்கு கும்மி அடித்தல், உரியடித்தல், கோலமிடுதல், கரும்பு கடித்தல், கோலாட்டம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பள்ளி தாளாளர் பரிசு வழங்கினார். விழாவில் செயலர் டாக்டர் அரவிந்தன், இணை செயலர் டாக்டர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பால பிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரிய ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பண்டிகையால்

எகிறியது

பூக்கள் விலை

பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் பூக்களின் பயன்பாடு அதிகரித்து, விலை உயர்ந்தது.

இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த பூ வியாபாரி குட்டி கூறியதாவது:

ஈரோடு மார்க்கெட்டுக்கு சத்தி, ஓசூர், சேலம், அந்தியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. பனிப்பொழிவால் வரத்து குறைந்து விட்டதால் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகை பூ, 1,600 ரூபாய்-க்கு விற்ற நிலையில், 800 ரூபாய் உயர்ந்து, 2,400 ரூபாய்க்கு நேற்று விற்றது.

இதேபோல் ஜாதி மல்லி, காக்கட்டான் பூக்கள் கிலோவுக்கு, 400 ரூபாய் விலை உயர்ந்தது. இவ்வாறு கூறினார். ஈரோட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை விபரம்:

மல்லிகை -கிலோ, 2,400 ரூபாய்; முல்லை-2,௦௦௦; ஜாதிமல்லி-1,200; காக்கட்டான்-1,200; பன்னீர் ரோஜா-160; ரோஜா-200; அரளி-140; கோழிக்கொண்டை-80; செவ்வந்தி-140; சம்பங்கி-140; கேந்தி-80 ரூபாய்க்கு விற்றது.

பொங்கல் எதிரொலி

பூவன் வாழைத்தார் விலை உயர்வு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புன்செய்புளியம்பட்டியில் பூவன் ரக வாழைத்தார் விலை உயர்ந்தது.

புன்செய்புளியம்பட்டி தினசரி மார்க்கெட்டுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து வாழைத்தார் விற்பனைக்கு வரத்தாகிறது. சில வாரங்களாக பனிப்பொழிவால் வரத்து குறைந்து, விற்பனையும் மந்தமானது.

இந்நிலையில் போகி மற்றும் பொங்கல் பண்டிகையால், வாழைப்பழங்களின் தேவை அதிகரித்தது. இதனால் நேற்று, 500க்கும் மேற்பட்ட வாழைத்தார் வரத்தானது. இதில் பூவன் ரக தார், 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனையானது. கடந்தவாரம், 18 கிலோ எடை கொண்ட பூவன் தார், 200 ரூபாய்க்கு விற்ற நிலையில், பொங்கல் பண்டிகையால், 400 ரூபாயாக உயர்ந்து விட்டது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: பூவன் ரக வாழை தார், 15 கிலோ முதல் 25 கிலோ வரை எடை கிடைக்கும். ஒரு தாரில், 140 முதல், 200 பழங்கள் வரை இருக்கும். இந்த வாரம் தொடர்ச்சியாக பண்டிகை வருவதால், 400 ரூபாய் முதல், 600 ரூபாய் வரை விற்றது. இவ்வாறு கூறினர்.

அரசு பஸ் மீது

தனியார் பஸ் உரசல்

ஈரோட்டில் இருந்து கோபிக்கு, நேற்று காலை, ௬:௩௦ மணிக்கு ஒரு அரசு பஸ் சென்றது. இதை தொடர்ந்து என்.ஆர்.டி., என்ற தனியார் பஸ்சும் கோபிக்கு புறப்பட்டது. இவ்விரு பஸ் டிரைவர்களிடையே முதலில் செல்வது யார் என்பது சர்ச்சை இருந்தது.

இந்நிலையில் சூளை பஸ் நிறுத்தத்தில் இருந்து கிளம்பி சென்ற அரசு பஸ் மீது தனியார் பஸ், பக்கவாட்டில் உரசியது. இதனால் இரு பஸ்களின் டிரைவர், கண்டக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வலது கை மணிகட்டில் காயம் ஏற்பட்டதாக, அரசு பஸ் டிரைவர் விஜயகுமார், 37, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

அந்தியூர் துாய்மை பணியாளரின் மகள்

கால்பந்து அணியில் இடம் பெறுவாரா?

அந்தியூர் பேரூராட்சி அலுவலக துாய்மை பணியாளராக பணிபுரிபவர் சுரேஷ். இவரின் மகள் மவுனிகா, ௧௩; ஈரோடு அரசு பெண்கள் விளையாட்டு விடுதியில், தங்கி படிக்கிறார். பஞ்சாப் மாநிலத்தில் நடந்த தேசிய கால்பந்து போட்டியில், தமிழக அணியில் மவுனிகா இடம் பெற்றார். இந்நிலையில், 16 வயதுக்கு உட்பட்ட இந்திய பெண்கள் கால்பந்து அணிக்கான தேர்வு, கோவாவில் நடக்கிறது. இதில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், இரு மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மவுனிகாவும் ஒருவர். மற்றொரு மாணவி சென்னையை சேர்ந்த அன்விதா ஆவார். இருவரும் இதற்காக கோவா சென்றுள்ளனர். வரும், 18ல் இந்திய அணிக்கான வீராங்கனையர் பட்டியல் அறிவிக்கப்படவுள்ளது.

த.மா.கா., சார்பில் சமத்துவ பொங்கல்

ஈரோட்டில் த.மா.கா., கட்சி அலுவலக வளாகத்தில், இளைஞரணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் யுவராஜா தலைமை வகித்தார். இளைஞரணி மாவட்ட தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுசெயலாளர் விடியல் சேகர், இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா, மாநில துணை தலைவர் ஆறுமுகம் பங்கேற்றனர்.

பா.ஜ., சார்பில் தேர்தல்

ஆலோசனை கூட்டம்

பா.ஜ., சார்பில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.பி., கார்வேந்தன், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் பங்கேற்றனர். இதில், 75க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பாராளுமன்ற தேர்தல் பணி குறித்து ஆலோசித்தனர். ஈரோடு மேற்கு சட்டசபை தொகுதி அமைப்பாளர் செந்தில், கிழக்கு சட்டசபை தொகுதி அமைப்பாளர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புகையிலை பொருள்விற்ற பெண் கைது

கவுந்தப்பாடி அருகே கண்ணாடிப்புதுார் பகுதியில், கவுந்தப்பாடி போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அதே பகுதி ருக்மணி தேவி, 54, என்ற பெண்ணின் மளிகை கடையில், சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள், 580 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்ததாக, அவரை போலீசார் கைது செய்தனர்.

தென்னை மரம் ஏறியவியாபாரி பரிதாப சாவு

மொடக்குறிச்சி, சென்னப்பநாயக்கன்பாளையம், ஈ.பி.நகரை சேர்ந்தவர் முத்துசாமி, 60, இளநீர் வியாபாரி. தென்னந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்து இளநீரை வெட்டி, நன்செய் ஊத்துக்குளியில் வியாபாரம் செய்து வந்தார். கடந்த, 13ம் தேதி காலை, நன்செய் ஊத்துக்குளியில் ஒரு தோப்பில் இளநீர் பறிக்க சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது மனைவி தாயம்மாள், தென்னந்தோப்பில் சென்று பார்த்தார். அப்போது செருப்பு, வண்டி மட்டும் இருந்தது. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தேடியதில், ஒரு மரத்தில் அமர்ந்த நிலையில் இருந்தவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

டிராக்டரை சுத்தம் செய்தவர்டிரெய்லர் இறங்கியதில் பலி

ஈரோடு, கதிரம்பட்டி, சூர்யா நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 43, ஜே.சி.பி., மற்றும் டிராக்டர் வாகனங்களை சொந்தமாக வைத்து வாடகைக்கு ஓட்டி வரும் தொழில் செய்தார். கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். சண்முகசுந்தரம் நேற்று முன்தினம் டிராக்டரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது பின்புற ஹைட்ராலிக் எதிர்பாராதவிதமாக இறங்கியதில், சண்முகசுந்தரத்தின் கழுத்து பகுதி சிக்கியது.

இதைப்பார்த்த அவரின் தாயார் கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்றனர். அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

டூ--வீலர் மீது சரக்கு வேன்மோதலில் தொழிலாளி பலி

ஈரோடு, பெரியசடையம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 60; நேற்று முன்தினம் இரவு பெரியசடையம்பாளையத்தில் இருந்து ஆணைக்கல்பாளையத்து மொபட்டில் சென்றார். ஈரோடு சுற்றுவட்ட சாலையில் எல்லம்மா தேவி கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு வேன் மொபட் மீது மோதியது. இதில் செல்வராஜுக்கு தலை, இடது கை, வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்தை ஏற்படுத்திய கோவை, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராமர், 35, மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உழவர் சந்தைகளில் 2 நாளில்௧27 டன் காய்கறி விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தி, தாளவாடி என ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது. பொங்கல் பண்டிகையால் நேற்றும், நேற்று முன்தினமும் அதிகாலை முதலே காய்கறி வாங்க மக்கள் அதிகம் வந்தனர்.

இதில் ஆறு சந்தைகளிலும், இரு நாட்களில், 127.58 டன் காய்கறி, பழ வகைகள் வரத்தாகி, 42.62 லட்சம் ரூபாய்க்கு விற்றது. கடந்த, 13ம் தேதி 201 விவசாயிகள், 8,596 வாடிக்கையாளர்கள்; நேற்று, 243 விவசாயிகள், 10,972 வாடிக்கையாளர்கள், சந்தைகளுக்கு வந்து சென்றனர்.

சந்தன கட்டை கடத்திய

பர்கூர் தம்பதி சிக்கினர்

சந்தன கட்டை கடத்திய பர்கூர் தம்பதி சிக்கினர்.

திருப்பத்துாரை அடுத்த வெங்களாபுரம் அருகே, திருப்பத்துார் தாலுகா போலீசார், நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஆட்டோவில் பைகளுடன் மூன்று பேர் வந்தனர். பைகளை சோதனை செய்ததில், 10 கிலோ சந்தன கட்டை இருந்தது. மூவரையும் விசாரித்ததில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த

ஒப்பந்தவாரி காளியப்பன், 55, அவர் மனைவி பாப்பா, 45, அவர்களது உறவினர் மாணிக்கம், 42, என தெரிந்தது.

பெங்களூருவில் இருந்து திருப்பத்துாரில் ஒருவருக்கு விற்பனை செய்ய, கொண்டு சென்றது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 கிலோ சந்தன கட்டையை பறிமுதல் செய்தனர்.

சூறைக்காற்றால் சாய்ந்த நெற்பயிர்

ஈரோடு அருகே கொங்கம்பாளையம், சடையம்பாளையம், குமிளம்பரப்பு, எல்லப்பாளையம், அம்பேத்கார் நகர் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீசிய சூறைக்காற்றால் தலை சாய்ந்தன. நெல்மணிகள் ஈரமான நிலத்தில் சகதியில் பதிந்து சேதமானது. கூடுதல் லாபம் கிடைக்குமென எதிர்பார்த்த நிலையில், சூறாவளி காற்றால் நெற்பயிர் சேதமானது, விவசாயிகளை சோகத்தில் தள்ளியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு, நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நசியனுார் ரேஷன் கடையில்

கூடுதல் பதிவாளர் ஆய்வு

நசியனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உட்பட்ட நியாயவிலைக் கடையில், கூடுதல் பதிவாளர் பிருந்தா, பொங்கல் பரிசு தொகுப்பை மக்களுக்கு வழங்குவதை ஆய்வு செய்தார்.

பின், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பையும் வழங்கினார். இதில் ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், துணைப்பதிவாளர் (பொது விநியோக திட்டம்) மாதேஸ், ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் பாலாஜி, நசியனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

புளியம்பட்டி சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் பொங்கல் விழா

புன்செய்புளியம்பட்டி சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், பொங்கல் விழா விமர்சையாக நடப்பது வழக்கம். மூன்று நாட்கள் நடக்கும் விழாவில், நேற்று மாலை கத்தி போடும் அலகு சேவையுடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஊத்துக்குளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, சுவாமி அழைப்பு துவங்கியது.

இதில் கலந்து கொண்ட சிறுவர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்ட வீரகுமாரர்கள் கத்தியால், உடம்பை கீறி வேண்டுதலை நிறைவேற்றினர். சிறுமிகள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். கோவை சாலை, பவானிசாகர் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சவுடேஸ்வரி அம்மன் கோவிலை ஊர்வலம் அடைந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், மதியம் அலங்கார பூஜை நடக்கிறது. இரவு, சிம்ம வாகனத்தில் சவுடேஸ்வரி அம்மன் திருவீதியுலா நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us