sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு


ADDED : ஜன 16, 2024 10:24 AM

Google News

ADDED : ஜன 16, 2024 10:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காய்கறி மார்க்கெட்டில்

வணிகர் பொங்கல் விழா

ஈரோடு வ.உ.சி., பூங்கா தினசரி காய்கறி மார்க்கெட்டில் பொங்கல் விழா, ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட், கனி வணிகர்கள் சங்கம் சார்பில் கொண்டாடினர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமசந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள், மக்களுக்கு பொங்கல், கரும்பு வழங்கினர்.

மல்லிகை பூ

கிலோ ரூ.2,080

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில், ஒரு கிலோ மல்லிகை பூ, 2,080 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை பூ, 1,126 ரூபாய், காக்கடா-1,475 ரூபாய், ஜாதி முல்லை-750, செண்டுமல்லி-45, கோழிகொண்டை-90, சம்பங்கி-120, அரளி-120, துளசி-50, செவ்வந்தி- 160 ரூபாய்க்கும் விற்பனையானது.

கோபிக்கு விஜயம் செய்தபாரியூர் காளியம்மன்

கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், கடந்த, 11ம் தேதி நடந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். மலர் பல்லக்கில் ஊர்வலமாக வந்த அம்மனுக்கு, கோபியில் நேற்று முன்தினம் இரவு தெப்போற்சவம் நடந்தது. இதையடுத்து கோபி ஈஸ்வரன் கோவில் வீதி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு விஜயம் செய்த அம்மனுக்கு, மஞ்சள் நீர் உற்சவம் நேற்று நடந்தது. பால், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் பொங்கல் விழா

பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையத்தில் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், மூன்று நாள் பொங்கல் விழா, நேற்று காலை சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பவானி ஆற்றில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து, சக்தி அழைப்பு தொடங்கியது. இதில், சிறுவர்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட வீரகுமாரர்கள் கத்தியால், கத்தி போட்டபடி ஊர்வலமாக வந்தனர். தொட்டம்பாளையம் வீதிகள் வழியாக சென்று, சவுடேஸ்வரி அம்மன் கோவிலை அடைந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள், பூஜை செய்து ஊர்வலத்தை வரவேற்றனர்.

92 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

ஈரோடு மாவட்டத்தில், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட, பொங்கல் பரிசுத்தொகுப்பு, 92 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், 7.25 லட்சம் கார்டுதாரர்களுக்கு மேல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு விட்டது. மீதி வழங்குவதற்கான தொகையை, கூட்டுறவில் ஒப்படைத்துள்ளனர்.

வெளியூரில் உள்ளவர்கள், உடல் நலக்குறைவு உட்பட பல்வேறு காரணத்தால் வாங்காதவர்கள், பொங்கல் விடுமுறைக்கு பின், நேரில் வந்து பெற்று செல்லலாம்.

அப்போது அரிசி, சர்க்கரை, 1,000 ரூபாய் மட்டும் வழங்கபப்படும். கரும்பு வழங்கப்படாது. இவ்வாறு கூறினர்.

கொங்கு கல்வி நிலையத்தில் விளையாட்டு விழா

ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். பள்ளி பொருளாளர் குணசேகரன், தாளாளர் செல்வராஜ் வரவேற்றனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வேளாளர் கல்வி நிறுவனங்கள் தாளாளர் சந்திரசேகர் கொடியேற்றி வைத்து, போட்டிகளை தொடங்கி வைத்தார். பல்வேறு வகையிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பேசினார். முன்னதாக பள்ளியில் மரக்கன்றுகளை நட்டார்.

விழாவில் கொங்கு கல்வி அறக்கட்டளை துணைத்தலைவர்கள் தெய்வசிகாமணி, சோமசுந்தரம், செயலாளர் செல்வராஜ், இணை செயலாளர் மீனாட்சிசுந்தரம், துணை பொருளாளர் நாகராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கோபியில் கே.ஏ.எஸ்.,

ஐ.ஏ.எஸ்., அகாடமி திறப்பு

கோபியில் கே.ஏ.எஸ்.,-- ஐ.ஏ.எஸ்., அகாடமி திறப்பு விழா நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சரும், கோபி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான, செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின் குத்துவிளக்கேற்றி, தலைமை வகித்து பேசினார். விழாவில் கோபி யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், ஒன்றிய செயலாளர் வேலுமணி மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றனர்.

பு.புளியம்பட்டி கோவில்களில்

பொங்கல் விழா கொண்டாட்டம்

புன்செய்புளியம்பட்டி அண்ணாமலையார், மாரியம்மன், காமாட்சியம்மன், சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, மக்கள் உற்சாகமாக பொங்கல் வைத்து நேற்று கொண்டாடினர். காலை, 6:00 மணிக்கு, மாரியம்மன், சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், பாரம்பரிய முறைப்படி, மாட்டு வண்டியில், ஏர் கலப்பை பூட்டி, கன்றுக்குட்டிகளுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜை நடந்தது. மண் பானையில் சமத்துவ பொங்கல் வைத்து, பெண்கள் குலவை எழுப்பி கொண்டாடினர். புன்செய்புளியம்பட்டி சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்து வரும் பொங்கல் விழாவில், மாவிளக்கு ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பால் உற்பத்தியாளர்கள் முதல்வருக்கு நன்றி

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை, போனஸ் வழங்கிய தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாநில தலைவர் ராஜேந்திரன், ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு கடந்த நவ., 5 முதல் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி கொடுத்துள்ளது. எங்களுக்கான ஊக்கத்தொகையையும் வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தணிக்கை துறையில் சிறப்பு அனுமதி பெற்று, பால் உற்பத்தியாளர்களுக்கான பொங்கல் போனசும் வழங்கப்பட்டுவிட்டது. இதற்காக தமிழக முதல்வர், பால் வளத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு கூறினார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாநில பொருளாளர் ராமசாமி, மாநில செய்தி தொடர்பாளர் ராஜூ, மாநில இணை செயலாளர்கள் கணேசன், முருகேசன், கோவை மாவட்ட தலைவர் சின்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

குழாய் உடைந்து வீணாக ஓடிய குடிநீர்

ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே, மேட்டூர் சாலையில் இருந்து நல்லி மருத்துவமனை செல்லும் சாலை நுழைவு பகுதியில், இரண்டு தினங்களுக்கு முன் குழாய் சீரமைப்பு பணி நடந்தது. ஆனால், முறையாக நிறைவு செய்யாமல் சென்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் அப்பகுதிக்கு, காவிரி ஆற்று குடிநீர் திறக்கப்பட்டபோது, குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் உடைப்பு ஏற்பட்டதால், சாலையில் குடிநீர் ஆறாக ஓடியது. மேட்டூர் சாலை, பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கும் அத்தண்ணீர் சென்றது. நேற்று மாலை வரை, அவ்விடம் சீரமைக்கப்படாமல் தண்ணீர் வீணானது.






      Dinamalar
      Follow us