/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதைப்பொருள் விற்ற நைஜீரியா ஆசாமி கைது
/
போதைப்பொருள் விற்ற நைஜீரியா ஆசாமி கைது
ADDED : மே 18, 2025 05:52 AM
ஈரோடு: பெருந்துறை அருகே 'மெத்தபெட்டமைன்' போதைப்பொருள் விற்ற, நைஜீரியா நாட்டு ஆசாமியை, போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறையில் கஞ்சா விற்ற நபரை, ஈரோடு மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில், ஒரு மொபைல் எண் குறித்து விசாரித்தபோது, அந்த எண்ணுக்குரிய ஆசாமி, கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் விற்பதாகவும், நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்தது.
கைதான நபர் மூலமாகவே நைஜீரியாவை சேர்ந்த நபரை, போதைப்பொருள் தேவைப்படுவ-தாக, விஜயமங்கலம் டோல்கேட் அருகே வரவழைத்து, மதுவி-லக்கு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்ததில், விஜயமங்கலம் சங்கு நகரில் வசிக்கும் ஜோன்ஸ், 44, என தெரிந்தது. ஒன்றரை ஆண்டுக்கு முன் இங்கு வந்ததாகவும், ஜவுளி ஏற்றுமதி செய்ததாகவும் தெரி-வித்துள்ளார். அவரிடம் இருந்து, 150 கிராம் மெத்தபெட்-டமைன், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சட்ட விரோதமாக தங்கி இருந்ததும் உறுதி செய்யப்பட்டு, கைது செய்தனர். அவ-ருக்கு வீடு கொடுத்த, வீட்டின் உரிமையாளர் மெல்வீனை அழைத்து சென்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.