/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலி அமெரிக்க டாலரை கொடுத்து பணம் பெற்ற நைஜீரிய நபர் கைது
/
போலி அமெரிக்க டாலரை கொடுத்து பணம் பெற்ற நைஜீரிய நபர் கைது
போலி அமெரிக்க டாலரை கொடுத்து பணம் பெற்ற நைஜீரிய நபர் கைது
போலி அமெரிக்க டாலரை கொடுத்து பணம் பெற்ற நைஜீரிய நபர் கைது
ADDED : ஆக 19, 2024 02:58 AM
ஈரோடு: ஈரோடு, கொளத்துபாளையம், தேவம்பாளையத்தை சேர்ந்தவர் அசோக்குமார், 36; ஈரோட்டில் அபி டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் நடத்தி வந்தார். மூன்று மாதங்களாக டிராவல்சை மூடி விட்டு, ஆன்லைனில் வெளிநாட்டு பணத்தை பரிமாற்றம் செய்து வருகிறார். இதற்காக ஆன்லைனில் விளம்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நைஜீரியா நாட்டின் லாகோஸ் மாகாணத்தை சேர்ந்த நாதன் க்சூகுவா, 42, விளம்பரத்தை பார்த்து விட்டு மொபைலில் அசோக்குமாரை தொடர்பு கொண்டார். மருத்துவ செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. தன்னிடம் உள்ள, 500 அமெரிக்க டாலரை மாற்றி, இந்திய ரூபாயாக தருமாறு கேட்டுள்ளார். இதன்படி அமெரிக்க டாலரை பெற்று கொண்ட அசோக்குமார், 42 ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்கியுள்ளார்.
நாதன் க்சூகுவா சென்ற பின் அமெரிக்க டாலரை பரிசோதித்த போது போலி என தெரிந்தது. இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். விசாரித்த போலீசார், தற்போது கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கே.ஆர்.புரத்தில் வசித்த நாதன் க்சூகுவாவை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

