தலைமை பொறியாளர், செயற்பொறியாளர் இல்லை மாநகராட்சி திட்டப்பணிகளில் சுணக்கம்
தலைமை பொறியாளர், செயற்பொறியாளர் இல்லை மாநகராட்சி திட்டப்பணிகளில் சுணக்கம்
ADDED : செப் 29, 2026 05:27 AM
ஈரோடு; ஈரோடு மாநகராட்சியில் தலைமை பொறி-யாளர், செயற்பொறியாளர் பணியிடம் பல மாதங்களாக காலியாக இருப்பதால், திட்டபணி-களின் வேகம் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் நான்கு மண்டலங்-களில், 60 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் மாநகராட்சியில் தலைமை பொறியாளர், செயற்-பொறியாளர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக இருப்பதால் திட்டபணிகள் மேற்கொள்-வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஊராட்சிக்கோட்டை தனி குடிநீர் திட்-டத்தில் விடுபட்ட பகுதிகளில் செயல்பாடு; பாதாள சாக்கடை திட்ட பணி; சோலார் காய்கறி மார்க்கெட் வளாக கட்டுமான பணி; வ.உ.சி பூங்கா மேம்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்-சித்திட்ட பணி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு பணி எப்போது நிறைவு பெறும் என்ற கேள்வி எழுந்துள்-ளது.
இதுகுறித்து மாநகராட்சி வட்டாரத்தில் கூறிய-தாவது: ஒரு மண்டலத்துக்கு தலா ஒரு செயற்-பொறியாளர், ஒரு உதவி செயற்பொறியாளர் என நான்கு மண்டலத்துக்கு 8 பேர் இருக்க வேண்டும். ஆனால் இரு உதவி செயற்பொறியாளர் மட்டுமே உள்ளனர். கோவை மாநகராட்சி தலைமை பொறியாளரான விஜயகுமார், ஈரோடு மாநகராட்-சிக்கு பொறுப்பு வகித்தாலும், ஈரோடு பக்கம் எட்-டிக்கூட பார்ப்பதில்லை. இந்த பணியிடங்களை விரைந்து நிரப்பினால் மட்டுமே, வளர்ச்சி திட்டப்-பணிகளில் ஏற்படும் சுணக்கத்தை தவிர்க்க முடியும். இவ்வாறு கூறினர்
