/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
என்னை யாரும் சிக்க வைக்க முடியாது: செங்கோட்டையன்
/
என்னை யாரும் சிக்க வைக்க முடியாது: செங்கோட்டையன்
ADDED : பிப் 13, 2025 03:19 AM
கோபி: ''நான் தெளிவாக இருக்கிறேன். என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. இங்கு வந்துள்ள செய்தியாளர்கள், ஏதாவது கிடைக்-குமா என தேடிக்கொண்டு உள்ளனர். எதுவும் அவர்களுக்கு கிடைக்காது,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்-டையன் பேசினார்.
ஈரோடு அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், கோபி அருகே லக்கம்பட்டியில் நேற்றிரவு நடந்தது. அதில் செங்கோட்டையன் பேசியதாவது:
கடந்த, 1972ல் எம்.ஜி.ஆர்., இந்த இயக்கத்தை துவக்கினார். அந்த தலைவருக்கு வந்த சோதனை, உலகில் எந்த தலைவ-ருக்கும் வந்திருக்காது. அவர் வாழ்ந்த காலம் பொற்காலம். நான் தெளிவாக இருக்கிறேன். என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. இங்கு வந்துள்ள செய்தியாளர்கள், ஏதாவது கிடைக்குமா என தேடிக்கொண்டு உள்ளனர். எதுவும் அவர்களுக்கு கிடைக்காது.
அன்னுாரில் நடந்த விழாவில், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., படம் இடம் பெறவில்லை என மட்டும் தான் கூறினேன். அந்த விழா குழுவினர், என்னை அழைத்த போது, அவர்களிடமும் அதைத்தான் சொன்னேன். ஆனால், நான் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. பத்திரிகையாளர்கள் பரபரப்பாக்கினர். நான் விழாவை புறக்கணிக்கவில்லை. அந்த இரு தலைவர்களின், படம் இடம் பெறவில்லை என்பதால் தான், பங்கேற்கவில்லை.
ஏனெனில், அந்த தலைவர்கள் என்னை வாழ வைத்தவர்கள். இன்று சிலர் எதையெல்லாமோ பேசி கொண்டுள்ளனர். அதை சொன்னால் தப்பாக மாறிவிடும். எத்தனை பேசினாலும் எனக்கு கவலையில்லை. என்னை பொறுத்தவரை, நேர்மையான பா-தையில், தன்னலம் கருதாமல் பாடுபடக் கூடியவன். எத்த-னையோ வாய்ப்பு வந்தபோதும், அதை பற்றி
கவலைப்படவில்லை.
என்னை சோதிக்காதீர்கள் என்பதே எனது வேண்டு கோள். தெளிந்த சிந்தனையோடு இருக்கிறேன். விட்டு கொடுக்கும் மனப்பான்மையோடு இருக்கிறேன். கருத்து சொல்பவர்களை பற்றி
கவலையில்லை. எம்.ஜி.ஆர்., வழியில் வந்தவர்கள் நாம். எதை-யாவது செய்தியாக போட்டு, என்னையும் துாங்க விடாமல், அவர்-களும் துாங்காமல், எதிர்க்கட்சியும் துாங்காமல் செய்து விடு-வார்கள். எந்த பணியை கொடுத்தாலும், செங்கோட்டையன் வெற்றிகரமாக முடிப்பார் என ஜெ., கூறியுள்ளார்.
இமயமலையே தன் தலைமீது விழுந்தாலும், சறுக்காமல், வழுக்-காமல் தன்னை இந்த இயக்கத்துக்காக அர்ப்பணிக்க கூடியவர் செங்கோட்டையன் என கூறியுள்ளார். (அது குறித்து ஜெ., கூறிய ஆடியோவை, மொபைல்போனில் உள்ளதை, மைக் முன் பார்-வையாளருக்கு போட்டு காட்டினார்.) தொண்டனோடு தொண்ட-னாக மீண்டும் பணியாற்றுவேன். தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.,- ஜெ., நல்லாட்சியை உருவாக்குவோம்.
இவ்வாறு பேசினார்.
பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, முன்னாள் எம்.பி., சத்திய-பாமா, கோபி நகர செயலர் பிரினியோ கணேஷ், கோபி யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன் உட்பட பலர்
பங்கேற்றனர்.