ADDED : ஜூன் 01, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : புகையிலை இல்லாத தினமாக, மே, 31ஐ உலக சுகாதார அமைப்பு கடைபிடிக்கிறது.
இதன்படி ஈரோடு பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயம், ராஜயோக தியான நிலையம் சார்பில், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.புகைப்பதால், 10 விநாடிக்கு ஒருவர் உயிரிழக்கிறார். உலகம் முழுவதும், 2,200 இறப்பும், ஆண்டுக்கு, 30 லட்சம் பேர் இறப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகிறது.புகைப்பவர்களின் அருகே இருக்கும் குழந்தைகள், கர்ப்பிணிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பீடி, சிகரெட் புகையில், 400க்கும் மேற்பட்ட விஷப்பொருட்கள் உள்ளன. இதில், 48 பொருட்கள் புற்று நோயை உண்டாக்கும், என்பதை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.