/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பெயரளவுக்கு ஆய்வு
/
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பெயரளவுக்கு ஆய்வு
ADDED : ஜூலை 01, 2025 01:06 AM
ஈரோடு ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பல கடைகள் பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. பல கடைகளில் தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதாகவும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதன்படி மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை திடீர் ஆய்வு செய்தார். கோவை பஸ்கள் நிறுத்தப்படும் பிளாட்பாரத்தில் உள்ள சில கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது தெரிந்து, பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
மற்ற கடைகளிலும் சோதனை நடந்தது. பவானி டவுன் பஸ்கள் நிறுத்தும் பகுதியில் செயல்படும் டீக்கடைகளில் ஆய்வு செய்தார். பலகாரம் தயாரிக்க பழைய எண்ணெய் பயன்படுத்தக்கூடாது என்று கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார்.