/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2 இடங்களில் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்
/
2 இடங்களில் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்
ADDED : மார் 20, 2024 01:26 AM
ஈரோடு:ஈரோட்டில் இரண்டு இடங்களில் இன்று வேட்பு மனுத்தாக்கல் துவங்குகிறது.
ஈரோடு கலெக்டர் அலுவலகம், மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்திலும் மனுத்தாக்கல் துவங்குகிறது. காலை, 11:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை மனுத்தாக்கல் செய்யலாம்.
இதுபற்றி தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், மனு பெறும் அலுவலகத்தில் இருந்து, 200 மீட்டருக்குள் கட்டுப்பாடு விதிக்கப்படும். இதற்காக வெள்ளை நிற கோடுகள் வரையப்பட்டுள்ளன.
மூன்று கார்களில் வரலாம். 200 மீட்டருக்கு அப்பால், அவர்கள் நிறுத்தப்படுவர். அதன்பின் ஒரு காரில் வேட்பாளர் மற்றும் 4 பேர் என, 5 பேர் மட்டும், 100 மீட்டருக்குள் அனுமதிக்கப்படுவர். கலெக்டர் அலுவலக பழைய கட்டடத்தின் முதல் தளத்திலும், ஆர்.டி.ஓ., அலுவலக தரைத்தளத்திலும் மனுக்களை பெறுகின்றனர். மனுவை தாக்கல் செய்ய வருவோர் தகவல், சந்தேகங்களை சரி செய்து கொள்ள வசதியாக, உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு வேட்பாளர் அதிகபட்சம், 4 மனு தாக்கல்; இரு தொகுதியில் மனுத்தாக்கல் செய்யலாம். வேட்பாளர் வருகை, மனுத்தாக்கல் என அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும். மனுத்தாக்கலுக்கு வருவோர் நடத்தை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். மனுத்தாக்கல் நடக்கும் இரு இடங்களிலும் டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு கூறினர்.

